ஷங்கர் மனதில் அஜித்?

No comments
ஷங்கர் இயக்கத்தில் அஜித் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 'வீர்ம்' படத்துக்குப் பிறகு கௌதம் மேனன் இயக்கும் படத்தில் அஜித் நடிக்க அவருக்கு ஜோடி போடுகிறார் அனுஷ்கா. இதையடுத்து, கே.வி. ஆனந்த் இயக்கத்தில் அஜித் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், ஷங்கர் இயக்கத்தில் அஜித் நடிக்கப் போகிறாராம். ஷங்கர், ரஜினிக்கு ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார். கதை கேட்ட ரஜினி ' நன்றாக இருக்கிறது.
 அஜித் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறார். ரஜினி சொன்னதால் அஜித், ஷங்கர் இயக்கத்தில் நடிக்க உடனே ஓ.கே. சொல்லிவிட்டாராம். டிசம்பர் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏப்ரல் 14ம் திகதி வெளியிடப்படும் என்று கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments :

Post a Comment