குத்து ரம்யவை கடத்தப்போவதாக மிரட்டிய டைரக்டர்
பிரபல கன்னட நடிகை திவ்யாஸ் பந்தனா. தமிழில் ரம்யா என்ற பெயரில் குத்து படத்தில் நடித்ததால் குத்து ரம்யா என்று அழைக்கப்பட்டார். கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருந்த ரம்யா சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து மாண்டியா தொகுதி இடைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி ஆனார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட இருக்கிறார்.
இந்த நிலையில நேற்று முன்தினம் (பிப்ரவரி 21) பெங்களூர் நகரில் கன்னட டைரக்டர் வெங்கட் என்பவர் பரபரப்பு போஸ்டர் ஒன்றை ஒட்டியிருந்தார்.
அந்த போஸ்டரில் இருந்த வாசகம் வருமாறு:
"ரம்யா... ஏன் என்னுடைய எண்ணங்களை புரிந்து கொள்ளாமல் இருக்கிறாய். என்னுடைய காதலை ஏற்றுக் கொள்வாயா? மாட்டாயா? என்று எனக்குத் தெரியாது. அடுத்த வாரம் உன்னை கடத்திச் சென்று பனசங்கரியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொள்வேன்.
இதனை யாராலும் தடுக்க முடியாது. இது படத்திற்காக எழுதப்பட்ட வசனம் அல்ல. உண்மையில் இது நடக்கும். நான் அடுத்து எடுக்கப்போகும் படத்துக்கு ஹிச்சா வெங்கட் (பைத்தியக்கார வெங்கட்) என்று பெயர் வைத்திருக்கிறேன்"
இவ்வாறு அந்த போஸ்டரில் கன்னடத்தில் குறிப்பிட்டிருக்கிறார் வெங்கட். இதனை பார்த்த போலீசார், இது சினிமாவுக்கான புதுமையான விளம்பரமா? அல்ல நிஜமாகவே மிரட்டுகிறாரா என்று குழம்பிப் போனார்கள். ரம்யாவும் இதுபற்றி புகார் எதுவும் கூறவில்லை.
சினிமா உலகத்தினரும் சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. காரணம் 2010ம் ஆண்டு தனக்கும், ரம்யாவுக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாக பத்திரிகை அடித்து விநியோகித்து காமெடி பண்ணியவர்தான் இந்த வெங்கட்.
"தற்போது ரம்யா பாராளுமன்ற உறுப்பினர் என்பதால் போலீசார் இதனை ஈசியாக எடுத்துக் கொள்ள முடியாது.
அதனால் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ரம்யா அவர் மீது புகார் அளித்தால், வெங்கட் கைது செய்யப்படுவார். இல்லாவிட்டால் எச்சரித்து விடுவிக்கப்படுவார்" என்கிறது பெங்களூர் போலீஸ்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment