ஷகிலாவாக அஞ்சலி?
நடிகை ஷகிலாவின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் தயாராகவுள்ளது.
ஷகிலா தனது வாழ்க்கையை சுயசரிதையாக எழுதி வைத்துள்ளார். சினிமாவில் தனக்கு நேர்ந்த கொடுமைகள், படங்களில் நிகழ்த்திய சாதனைகள் தன்னை ஏமாற்றியவர்கள் பற்றிய விவரங்கள் போன்ற விடயங்களையும் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.
இதில் இருக்கும் முக்கிய சம்பவங்களை வைத்து படமாக உருவாக்கப்போகிறார்கள்.
சில்க் ஸ்மிதா படம் போல் ஷகிலா வாழ்க்கை கதை படமும் வெற்றிகரமாக ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் இதைப் படமாக எடுக்கின்றனர்.
இதில் ஷகிலா வேடத்தில் நடிக்க அஞ்சலியிடம் கால்ஷீட் கேட்டு பேச்சு வார்த்தை நடக்கிறது. அஞ்சலியும் இதில் நடிக்க விருப்பம் காட்டுவதாக கூறப்படுகிறது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment