வெளியே கசிந்த நயன்தாராவின் ரகசியம்

No comments
ஆயுர்வேத குளியல் மூலம் தன் அழகை பராமரித்து வருகிறாராம் நயன்தாரா. தமிழில் ஆரம்ப என்ட்ரியை சத்தமில்லாமல் கொடுத்த நயன்தாரா அதன்பிறகு ரஜினி, விஜய், அஜித் என்று முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு தமிழ் சினிமாவை ஒரு ரவுண்டு வந்தார். மேலும் சிம்பு, பிரபுதேவா, ஆர்யா என்று எத்தனை முறை காதல் சர்ச்சைகளில் சிக்கினாலும் ரசிகர்களுக்கு மட்டும் அவர் மீதான கிரேஸ் குறையவில்லை. காரணம், தனது அழகை முறையாக பராமரிப்பதில் அதீத அக்கறை காட்டி வருகிறார் நயன்தாரா.


 தற்போது ஆரம்பம், ராஜா ராணி, அனாமிகா படங்களில் நடித்து முடித்த பிறகு சிம்பு, ஜெயம்ரவியுடன் நடித்துக்கொண்டு வருகிறார். இந்த இடத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, இப்போது தனது உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நயன்தாரா, அடிக்கடி ஆயுர்வேத குளியல் போடுகிறாராம். இதன்காரணமாக, அவரது உடலும், தோலும் மினுமினுப்பு குறையாமல் இருக்கிறதாம். இதற்காகவே மாதாமாதம் ஒரு பெரிய தொகையை செலவு செய்கிறாராம் நயன்தாரா.

No comments :

Post a Comment