கோச்சடையான் பாடல்கள் வரும் மார்ச் 9 இல் வெளியீடு

No comments
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இந்தாண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி 6 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாக இருக்கும் படம் கோச்சடையான். ரஜினியின் இரண்டாவது மகள் செளந்தர்யா இயக்கியுள்ளார். , நடிப்பில், அனிமேஷன் படமான கோச்சடையான் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது. இரட்டை வேடத்தில் ரஜினிகாந்த நடிக்க அவருடன் தீபிகா படுகோனே, சரத்குமார், ஆதி, நாசர், ருக்மணி, ஷோபனா, ஜாக்கி ஷெரப் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
 ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மிகப்பெரும் பொருட்ச்செலவில் மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்ட்மென்ட் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில் கோச்சடையான் தமிழ் பதிப்பின் இசை வெளியீட்டு விழா மார்ச் 9ம் தேதியும், தெலுங்கு பதிப்பின் இசை வெளியீட்டு விழா மார்ச் 10ம் தேதியும் நடைபெறுகிறது. . இந்த விழாக்களில் ரஜினிகாந்த், தீபிகா படுகோனே உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் பங்கேற்கின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்றுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments :

Post a Comment