கூட்டணி மாறிய மணிரத்னம்

No comments
முதல் முதலாக ஒளிப்பதிவாளர் ரவிவர்மனுடன் இணைகிறார் மணிரத்னம். அந்நியன், தசாவதாரம், வேட்டையாடு விளையாடு, பர்ஃபி போன்ற பல படங்களில் ஒளிப்பதிவாளரக பணிபுரிந்த ரவி வர்மன் முதன் முதலாக மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்ற இருக்கிறார். மணிரத்னம், தான் இயக்கிய சமீபகால படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காத நிலையில், தனது அடுத்த படத்தை ஒரு சூப்பர் ஹிட் படமாக தர வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார். 
 இதற்காக நடிகர்கள் நாகார்ஜுனா, மகேஷ் பாபு, பஹத் பாசில், ஐஸ்வர்யா ராய் முதலானோரை கமிட் செய்து வைத்துள்ள மணிரத்னம், தனது ஆஸ்தான இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடனும் கூட்டணி அமைத்துள்ளார்.

No comments :

Post a Comment