ஆஸ்கார் செல்லாத இந்தியப் படங்கள்
ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இந்தியப் படங்கள் ஒன்றுக்குக்கூட இடமில்லை.
சர்வதேச அளவில் சினிமா துறையில் உயரிய விருதான ஆஸ்கார் விருதுக்கான போட்டிக்கு தெரிவாகி உள்ள படங்கள், நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கான பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
86வது ஆண்டு ஆஸ்கார் விருதுக்கான இந்த தேர்வு பட்டியலை ஆஸ்கார் அகாடமியின் தலைவர் செரில் பூன் ஐசக்ஸ், நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் ஆகியோர் அறிவித்தனர்.
இந்தப் போட்டியில் கிராவிட்டி மற்றும் அமெரிக்கன் ஹஸில் ஆகிய இரு படங்களும் தலா 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. 12 இயர்ஸ் ஏ ஸ்லேவ் படம் 9 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் இந்தியாவில் இருந்து எந்த ஒரு சினிமா படமோ அல்லது நடிகர், நடிகைகளின் பெயரோ இடம் பெறவில்லை. சிறந்த வெளிநாட்டுப் பட பிரிவிலும் கூட இந்தியப் படமோ, இந்தியாவில் தயாரான வேறு எந்தப் படமோ இடம்பெறவில்லை.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment