நண்பேண்டா படத்தில் நயன்தாரா சம்பளம் என்ன?
நயன்தாராவின் ‘மார்க்கெட்’ அந்தஸ்து படத்துக்கு படம் உயர்ந்து கொண்டே போகிறது.
ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு நடிக்க வந்தாலும் ராஜா ராணி, ஆரம்பம். இது கதிர்வேலன் காதல் என்று தொடர்ச்சியாக மூன்று ஹிட் படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக கஹானி இந்திப் பட ரீமேக்கான நீ எங்கே என் அன்பே நாயகிக்கு முக்கியத்துவமுள்ள படம். இவைதவிர, உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கும் அடுத்த படமான நண்பேண்டா படத்திலும் நயன்தான் நாயகி.
முதலில் நண்பேண்டா படத்தில் நடிக்க இருந்தவர் காஜல் அகர்வால்தான். இதற்காக அவருக்கு அட்வான்ஸ் பணம் எல்லாம் கொடுத்துவிட்டார்களாம். ஆனால் இது கதிர்வேலன் காதல் படத்தில் நயனின் ஜோடிப் பொருத்தம் உதயநிதிக்கு பிடித்துப் போகவே சூட்டோடு சூடாக அடுத்த படமான நண்பேண்டாவுக்கும் நயனையே ஒப்பந்தம் செய்துவிட்டாராம்.
மேலும் படத்தில் நடிப்பதற்காக நயன்தாராவுக்கு ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். முன்னதாக ஐம்பது லகரத்தை அட்வான்ஸாக கொடுத்துவிட்டதாக கோடம்பாக்கத்திலிருந்து தகவல்கள் கசிகின்றன.
அதேசமயம், காஜலுக்குக் கொடுத்த அட்வான்ஸ் தொகையை உதயநிதி இன்னும் திரும்பிப் பெறவில்லை. காரணம், தன் அடுத்த படத்தில் காஜலை நடிக்கவைக்கும் திட்டத்தில் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment