காதல் பற்றி மனம் திறக்கிறார் ஆர்யா

No comments
காதல் திருமணம் தான் செய்வேன் கூறியுள்ளார் ஆர்யா. தன்னுடைய பெயர்கள் பல நடிகைகளுடன் அடிபட்டாலும் அதைப்பற்றி சிறிதும் கண்டுகொள்ளாமல் எப்போதும் ஜாலியாக இருப்பவர் ஆர்யா. இந்நிலையில் காதல் பற்றி மனம் திறந்துள்ளார் ஆர்யா,
இதுகுறித்து அவர் கூறுகையில், காதல் என்பது இனிமையான உணர்வு. அனுபவத்தால் தான் தெரியும். காதலிப்பது மகிழ்ச்சியானது. உற்சாகம் தரக்கூடியது. எனது நண்பர்கள் நடிகர் ஜீவா, சந்தானத்தின் காதல் கதைகள் என்னை மிகவும் கவர்ந்தன. இவர்கள் சினிமாவுக்கு வரும் முன்பே காதலித்தவர்கள். இப்போதும் மனைவியை காதலித்து கொண்டு இருக்கிறார்கள். என்னை பொறுத்தவரை இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. அது விரைவில் நடக்கும் என்று நம்புகிறேன் என கூறியுள்ளார்.

No comments :

Post a Comment