நைசாக நழுவிய ஸ்ரேயா - கடுப்பில் இயக்குனர்

No comments
அன்னயும் ரசூலும்’ படத்துக்கு பிறகு மலையாளத்தில் நடிக்க, வாய்ப்புகள் தேடி வந்தும் கூட நடிக்க மறுத்து வந்தார் ஆண்ட்ரியா. காரணம் அந்தப்படத்தில் ஜோடியாக நடித்த பஹத் பாஸில் அவர் மீது வீசிய காதல் அம்பு தான். இப்போது தான் பஹத் பாஸிலின் அம்பு நஸ்ரியா பக்கம் போனதே நமக்கு என்ன கவலை என்று கே.எஸ்.உன்னி என்பவர் இயக்கும் மலையாளப் படம் ஒன்றில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
 இது இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட் என்பதால் இன்னொரு ஹீரோயினாக ஸ்ரேயாவை ஒப்பந்தம் செய்தார்கள். முதலில் ஒத்துக்கொண்ட ஸ்ரேயா, தன்னைவிட ஆண்ட்ரியாவுக்குத்தான் அதிக வாய்ப்பு உள்ள கேரக்டர் என்பது தெரிய வந்ததால் நான் விலகிக்கொள்கிறேன் என கிளம்பிவிட்டாராம். இப்போது அவருக்குப் பதிலாக வேறு ஒரு ஹீரோயினை கடுப்புடன் தேடி வருகிறார் படத்தின் இயக்குனர் உன்னி.

No comments :

Post a Comment