அபூர்வ நாயகன் கமல் பற்றிய புத்தகம் வெளியீடு

No comments
பிரபல ராமராஜ் காட்டன் தயாரிப்பு நிறுவனத்தின் அதிபர் கே.ஆர்.நாகராஜன் கமலஹாசனின் தீவிர ரசிகர். இவர் தனது முயற்சியால் கமலஹாசன் நடித்த படங்களின் அபூர்வ படங்கள் மற்றம் தகவல்கள் அடங்கிய புத்தகம் ஒன்றை அபூர்வ நாயகன் என்ற பெயரில உருவாக்கி உள்ளார். இதன் வெளியீட்டு விழா ஆழ்வார் பேட்டையில் உள்ள கமலஹாசன் அலுவலகத்தில் நடந்தது. கமலஹாசன் வெளியிட்டார். 
கமலஹாசன் நற்பணி மன்ற நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். "உலக அரங்கில் திரைத் துறையை தலைநிமிரச் செய்த கலைஞன் கமலின் சாதனைகள் குறித்த பெட்டகமாக இந்த புத்தகம் திகழும். 
1960 முதல் இன்று வரை 55 ஆண்டுகள் தனது உழைப்பின் மூலம் தமிழகத்தின் பெருமையை தரணியில் உயர்த்திய தமிழனுக்கு இதை சமர்ப்பிக்கிறோம்" என்கிறார் கே.ஆர்.நாகராஜன்.

No comments :

Post a Comment