தமிழில் தயாராகும் இரண்டு உன்னத திரைப்படங்கள்!

No comments
 தமிழ் சினிமாவில் அவ்வப்போது அத்திபூத்த மாதிரி சில அபூர்வ முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அப்படியாக இப்போது இரண்டு உன்னதமான திரைப்படங்கள் உருவாகிக் கொண்டிருக்கிறது. ஒன்று ஆன்மீக மகான் ஸ்ரீராமானுஜரின் வரலாற்று காவியம், அடுத்தது அதே பெயரைக் கொண்ட கணிதமேதை ராமானுஜனின் வாழ்க்கை சரித்திரம். ஸ்ரீராமானுஜர் சாதி வேறுபாடற்ற சமுதாயம் மலர வேண்டும், எல்லா மதத்தினரும் நற்கதி அடையவேண்டும் என்ற கருத்தைக் கொண்டு அதை அழுத்தம் திருத்தமாக போதித்தவர் மகான் ஸ்ரீராமானுஜர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூரில் பிறந்த மகான். வைஷ்ணவத்தை போதித்த ஞானி. இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து இந்துமத தத்துவத்தை பரப்பியவர். இறுதியில் திருவரங்கத்தில் சமாதிநிலை அடைந்தார்.
 திருவரங்கம் அரங்கநாதர் கோவிலுக்குள் தனி சன்னிதி அவருக்கு இருக்கிறது. அவருக்கென்று தனி விழாக்கள் நடக்கிறது. அப்படிப்பட்ட மகானின் வாழ்கையை ஹைகிரீவா சினிமாஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் டி.கிருஷ்ணன், பி.ஆர்.சேதுராமன் ஆகியோர் திரைப்படமாக உருவாக்கி வருகிறார்கள். ஸ்ரீராமானுஜராக கிருஷ்ணன் என்பவர் நடிக்கிறார். மற்றும் ராதாரவி, நிழல்கள் ரவி, ஸ்ரீமன், டெல்லி கணேஷ், ஒய்.ஜி.மகேந்திரன் நடிக்கிறார்கள். ஸ்ரேயா டில்லி பாதுஷாவின் மகள் பீவி நாச்சியாராக நடிக்கிறார். மறைந்த கவிஞர் வாலி பாடல்களை எழுதியுள்ளார். அதற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். பிரமூர்தாஸ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். ரவி.வி.சுந்தர் இயக்குகிறார்.
 கோடிக்கணக்கான ரூபாய் பட்ஜெட்டில் படம் தயாராகி வருகிறது. ராமானுஜன் மோகமுள், முகம், பாரதி, பெரியார் படங்களை இயக்கிய ஞானராஜசேகரன் அடுத்து இயக்கிக் கொண்டிருக்கும் படம் ராமானுஜன். கணிதமேதை ராமானுஜத்தின் வாழ்க்கை சரித்திரம். தமிழிலும், ஆங்கிலத்திலும் தயாராகி வருகிறது. தமிழ்நாட்டில் பிறந்து உலகப்பெரும் கணித மேதையாக வளர்ந்த ராமானுஜரின் போராட்டங்கள்தான் படம். ராமானுஜரின் தாயார் கேரக்டர் பவர்புல்லான கேரக்டர் அதில் சுஹாசினி நடிக்கிறார். ராமானுஜனாக சாவித்திரியின் பேரன் அபிநய் நடிக்கிறார். ராமானுஜன் உலக புகழ் பெற காரணமாக இருந்த பேராசிரியர் ஹார்டியாக லண்டன் நடிகர் கெவின் மைக்கோவன் நடிக்கிறார். மற்றும் சில ஆங்கில நடிகர்களும் நடிக்கிறார்கள். சரத்பாபு, ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், டெல்லி கணேஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள். ராமாஜனன் வாழ்ந்த கும்பகோணம், நாமக்கல், சென்னை, நெல்லூர், லண்டன் கேம் பிரிட்ஜ் பல்கலைகழம் ஆகிய இடங்களிலேயே படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. 
ரமேஷ் விநாயகம் இசை அமைத்துள்ளார், சன்னி ஜோசம் ஒளிப்பதிவ செய்கிறார். வாலி பாடல்களை எழுதியுள்ளார். இந்தப் படமும் கோடிக் கணக்கான ரூபாய் பட்ஜெட்டில் தயாரகிறது. நல்ல ரசனை உள்ள தமிழ் மக்கள் இந்த படங்களுக்கு ஆதரவு அளிப்பதன் மூலம் மேலும் இதுபோன்ற அபூர்வ படங்கள் உருவாக வாய்ப்பு அமையும்.

No comments :

Post a Comment