த்ரிஷாவின் மல்லுவுட் கனவு

No comments
மலையாள படங்களில் நடிப்பதற்கு ரெடியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் த்ரிஷா. த்ரிஷா சினிமாவுக்கு வந்து 10 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இதுவரை ஒரு மலையாளப் படத்தில்கூட நடித்தது இல்லை. மலையாளப் படங்களில் சம்பளம் குறைவு என்பதாலும், சீனியர் நடிகர்களுடன் நடிக்க வேண்டியது இருக்கும் என்பதாலும் நடிப்பதை தவிர்த்து வந்தார். 
 இப்போது மலையாளப் படங்களில் நடிக்கத் தயார் என்று அறிவித்திருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கொச்சி சென்றிருந்த திரிஷா அங்கு நிரூபர்களிடம் கூறுகையில், எனக்கு மலையாளப் படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. நல்ல கதை அமைந்தால் உடனே நடிக்க ரெடியாக இருக்கிறேன். மேலும் மலையாளத்தில் மோகன்லால் எனக்கு பிடித்த நடிகர். தமிழ் படங்களுக்கு கேரள மக்கள் நல்ல வரவேற்பை கொடுப்பது சந்தோஷமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

No comments :

Post a Comment