இடைவெளி ஏன்?: மீனாட்சி விளக்கம்

No comments
கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் அறிமுகமானவர் பிங்கி சர்க்கார். அந்த படத்தின் இயக்குனர் மூர்த்தி மதுரை படம் என்பதால் பிங்கி சர்காருக்கு மீனாட்சி என்று பெயர் சூட்டினார். அதற்கு பிறகு ஒரு சில படங்களில்தான் மீனாட்சி நடித்தார். பிறகு திடீரென்று சினிமாவை விட்டு விலகினார். 3 வருடங்களுக்கு பிறகு இப்போது வில்லங்கம் என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆகியிருக்கிறார். 3 வருடமாக எங்கே சென்றார்.
ஏன் சினிமாவில் நடிக்கவில்லை என்பதற்கு இப்போது விளக்கம் அளித்திருக்கிறார். அவர் கூறியதாவது: தமிழில் சரியான வாய்ப்பு கிடைக்கலேன்னாலும் மலையாளத்தில் நிறைய வாய்ப்புகள் வந்துச்சு. அந்த நேரத்துல எங்க அப்பா நோய்வாய்பட்டு படுத்த படுக்கையாகிட்டார். அவரை பக்கத்துல இருந்து பார்க்க வேண்டியதாப்போச்சு. அவரோட பிசினசையும் கவனிக்க வேண்டியதாப்போச்சு.

 அப்பாவோட பிசினஸ் ஆஸ்திரேலியாவிலும் இருந்துச்சு. அதனால அங்க கொஞ்ச நாள் போயிருந்தேன். இதற்கு இடையில் எம்.பி.ஏ.வும் படிச்சு முடிச்சேன். இப்போது அப்பா குணமாயிட்டார். பிசினசையும் கவனிக்க ஆரம்பிச்சிட்டார்.

 நானும் நடிக்க வந்துட்டேன். வில்லங்கம் ஹீரோயின் சப்ஜெக்ட் படம். முழு படமும் என்னை சுற்றி நடக்கும். என்னோட ரீ-என்ட்ரி பலமா இருக்கணும்னு கவனமாக செலக்ட் பண்ணின படம். அதோட துணை முதல்வர்ங்ற படத்துல நான் ஜெயராமுக்கு ஜோடியா நடிக்கிறதா செய்திகள் வந்துச்சு. அப்படி எந்தப் படத்துலேயும் நான் நடிக்கல. வில்லங்கம் மட்டும்தான் இப்போதைக்கு என்னோட ஒரே படம். என்கிறார் மீனாட்சி.
  • Blogger Comments
  • Facebook Comments

No comments :

Post a Comment