மீண்டும் தள்ளிப்போகும் கோச்சடையான்
ரஜினியின் கோச்சடையான் பாடல் வெளியீட்டு விழா மீண்டும் தள்ளிப்போகிறது.
‘கோச்சடையான்’ படம் ஏப்ரல் 11ம் திகதி உலகம் முழுவதும் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் வருகிறது. மொத்தம் 6 ஆயிரம் திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை வருகிற 28ம் திகதி பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளும் நடந்து வந்தன.
தற்போது அடுத்த மாதம் (மார்ச்) இரண்டாவது வாரத்துக்கு பாடல் வெளியீட்டு விழாவை தள்ளி வைத்தனர்.
கடந்த மாதமே பாடல்களை விழா நடத்தி வெளியிட திட்டமிட்டனர். இப்போது இரண்டாவது முறையாக தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment