அம்மா வேடத்தில் நடிக்கிறார் ஸ்ரீதேவி!

No comments
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி, இந்திய அளவிலான நடிகையாக உருவெடுத்தவர் ஸ்ரீதேவி. பின்னர் இந்தியில் தன்னை அறிமுகம் செய்த தயாரிப்பாளர் போனிகபூரையே திருமணம் செய்து கொண்டு மும்பைவாசியாகி விட்டவர், அதன்பிறகு நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு குடும்பம், குழந்தைகள் என்று முழுநேர இல்லத்தரசியானார். ஆனால், அப்படியிருந்தவருக்கு மீண்டும் நடிப்பு ஆசை தலைதூக்கவே, இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் மூலம் மறுபிரவேசம் செய்தார். 
 அப்படத்தில் ஸ்ரீதேவியை சுற்றியே கதை என்பதால், தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி முத்திரை பதித்தார். இருப்பினும் தொடர்ந்து அதுமாதிரியே அவர் கதைகளை எதிர்பார்த்ததால், சரியான வாய்ப்புகள அமையவில்லை. இந்த நிலையில், தற்போது தெலுங்கில் ராஜமவுலி இயக்கி வரும் பாகுபாலி படத்தில் பிரபாசின் அம்மாவாக நடிக்கிறார் ஸ்ரீதேவி. படத்தின் ஒரு ப்ளாஷ்பேக்கில் வந்தாலும், ஸ்ரீதேவியின் நடிப்பும் பேசும்படியாக இருக்குமாம். 
 குறிப்பாக, ராணி கெட்டப்பில் ஸ்ரீதேவி நடித்துள்ள காட்சிகள், இரண்டு மகன்களை பெற்றுக்கொள்வதற்கு முன்பு அவர் சந்திக்கிற பிரச்சினைகள் நெஞ்சை பதபதக்க வைக்கும் வகையில், படமாக்கப்பட்டுள்ளதாம். அந்த வகையில், ஸ்ரீதேவிக்கும் சிறிய அளவிலான ஆக்சன் காட்சி உள்ளதாம். 
இந்த படத்தில் நடிப்பதற்காக, பிரபாஸ், ராணா, அனுஷ்கா என அனைவருமே உடம்பை ஸ்லிம் பண்ணியதைப்பார்த்து ஸ்ரீதேவியும், ராணி கெட்டபுக்காக தனது உடல் எடையை கணிசமான அளவு குறைத்துக்கொண்டு நடித்திருக்கிறாராம்.

No comments :

Post a Comment