கைவசம் படங்கள் இருப்பதால் இப்போதைக்கு குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டேன்: வித்யா பாலன்

No comments
நடிகை வித்யாபாலன் கர்ப்பமாக இருக்கிறார் என்ற வடநாட்டு மீடியாக்கள் செய்தியை அள்ளிவிட அவரை வைத்து படம் எடுத்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள் அலறி துடித்து ஓடினார்கள். அதைப் புரிந்து கொண்ட வித்யாபாலன் தான் கர்ப்பமாக இல்லை என்று அறிவித்து அவர்கள் வயிற்றில் பால் வார்த்தார். அவர் மேலும் கூறியிருப்பதாவது: கைவசம் நிறைய படங்கள் இருப்பதால் இப்போதைக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டம் இல்லை. நான் கர்ப்பமாக இருப்பதாக வந்த செய்திகள் தவறானது.
 எனக்கு தெரியாத ஒரு செய்தி மீடியாக்களுக்கு எப்படித் தெரியும். அதேமாதிரி திருமணத்துக்கு பிறகு நெருக்கமான காட்சிகளில் வித்யாபாலன் நடிக்க மறுக்கிறார் என்று பரப்புகிறார்கள். அப்படி எதுவும் இல்லை. முன்பு எப்படி நடித்தேனோ அதேபோன்றுதான் இப்போதும் நடிக்கிறேன். நெருக்கமான காட்சிகளில் நடிப்பதாக இருந்தால் முன்பு பெற்றோரிடம் அந்த காட்சி பற்றி கூறி அனுமதி வாங்குவேன். இப்போது கணவர் சித்தார்த்திடம் கூறி அனுமதி வாங்கிக் கொள்கிறேன். அவர் என் நடிப்புக்கு எந்த கட்டுப்பாடும் விதிப்பதில்லை. இருந்தாலும் மனைவி என்கிற முறையில் அவரிடம் அனுமதி பெற்றுக் கொள்கிறேன். இவ்வாறு வித்யா பாலன் கூறியிருக்கிறார்.

No comments :

Post a Comment