மலையாள கரையோரம் லட்சுமி மேனன்

No comments
மீண்டும் மலையாள கரையோரம் கால்பதித்துள்ளார் லட்சுமி மேனன். இப்போது தமிழில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் லட்சுமி மேனன், நடிகையாக அறிமுகமானது வினயன் இயக்கிய ‘ரகுவின்டெ சொந்தம் ரசியா’ என்ற மலையாள படம் மூலம்தான்
. இந்த படத்தைத் தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கிய ‘கும்கி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிய லட்சுமி மேனனுக்கு பிறகு தமிழில் ஏறு முகம்தான். தற்போது சித்தார்த்துடன் ‘ஜிகர்தண்டா, விமல் கூட ‘மஞ்சப்பை’, கௌதம் கார்த்திக் கூட ‘சிப்பாய்’ விஷாலுடன் ‘நான் சிகப்பு மனிதன்’ என பல படங்களில் நடித்து வரும் லட்சுமி மேனன் அடுத்து மலையாளத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான திலீபுடனும் ஜோடி சேர இருக்கிறார். மலையாளத்தின் பிரபல இயக்குனரும், தமிழில் ஏர்போர்ட் படத்தை இயக்கியவருமான ஜோஷி இயக்கும் படத்தில் தான் இருவரும் ஜோடி சேர்ந்து நடிக்க இருக்கிறார்கள்.

No comments :

Post a Comment