என்னை படுகவர்ச்சி நாயகியாக்க கங்கனம் கட்டிக்கொண்டு திரிகின்றனர்! -பிந்துமாதவி
கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்குராஜா படங்கள் வெற்றி பெற்றபோதும் பிந்துமாதவிக்கு அதிகமானபடங்கள் கமிட்டாகவில்லை. தற்போது ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் உள்பட இரண்டொரு படங்களில் மட்டுமே நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் இந்த படத்திலும் அவர் மட்டுமே நாயகி இல்லை. சித்தார்த்துடன் உதயம் என்எச்4 என்ற படத்தில் நடித்த அர்ஷிதா ஷெட்டியும் இன்னொரு நாயகியாக நடிக்கிறார்.
இதன்காரணமாக, தமிழில் வளரத் துடிக்கும் அர்ஷிதா, பிந்து மாதவியை முந்திச்சென்று விட வேண்டும் என்று நடிப்பில் கடும் போட்டிக்கோதாவில் இறங்கியதாக கூறுகிறார்கள்.
இதுபற்றி பிந்துமாதவி கூறுகையில், எந்த படமாக இருந்தாலும் இரண்டு கதாநாயகிகள் என்கிறபோது, இருவருக்குள்ளும் நடிப்பில் போட்டி ஏற்படுவது சகஜமான விசயம். அப்படித்தான் இந்த படத்தில் நடிக்கும்போது எங்களுக்குள் ஏற்பட்டது. மேலும், இந்த படத்தில் நான்தான் முக்கிய கதாநாயகி.
அர்ஷிதா செகண்ட் ஹீரோயினிதான். அதனால் அருள்நிதிக்கு ஜோடியாக நானே நடித்திருக்கிறேன்.
மேலும், இது முழுநீள காமெடி ஸ்கிரிப்ட் என்பதால் இந்த படத்திலிருந்து காமெடி நாயகியாகவும் உருவெடுத்திருக்கிறேன். ஏற்கனவே விமலுடன் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திலேயே காமெடிக்கு பிள்ளையார் சுழி போட்ட நான், இந்த படத்தில் இன்னும் பெரிய அளவில் ஸ்கோர் பண்ணியிருக்கிறேன்.
அதனால், இந்த படமும் எனக்கு நடிப்பில் சவாலாகவே இருந்தது.
அதேசமயம், இதில் எனது நடிப்பைப்பார்த்து இனிமேல் காமெடி கலந்த கதாபாத்திரங்கள் என்றால் கட்டாயம் டைரக்டர்கள் என்னைத்தான் அழைப்பார்கள். அந்த அளவுக்கு எனக்குள் இருந்த காமெடி சென்ஸை வெளியே கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர்.
ஆக, என்னை கவர்ச்சி நாயகியாக மாற்ற சில டைரக்டர்கள் தொடர்ந்து கங்கனம் கட்டிக்கொண்டு திரியும் நிலையில், காமெடி என்ற நல்லதொரு பாதுகாப்பு கவத்தை என் மீது அணிந்து விட்டிருக்கிறார் இயக்குநர் என்கிறார் பிந்துமாதவி.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment