சிம்புவுடனான காதல் முறிந்ததா? ஹன்சிகாவின் சிங்கிள் அறிவிப்பால் பரபரப்பு

No comments
நடிகை ஹன்சிகா, டுவிட்டர் சமூக வலைத் தளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பால், சிம்புவுக்கும், அவருக்கும் இடையேயான காதலில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சிம்பு, நடிகை நயன்தாராவை காதலித்தார். பின், கருத்து வேறுபாடு காரணமாக, இவர்களின் காதல் முறிந்தது. இதற்கிடையே, வாலு படத்தில் இணைந்து நடித்தபோது, சிம்புவுக்கும், நடிகை ஹன்சிகாவுக்கும் இடையே, காதல் மலர்ந்ததாக பேச்சு எழுந்தது. முதலில், இருவருமே, இதை மறுத்தாலும், பின், ஒப்புக்கொண்டனர். இதற்கிடையே, நயன்தாராவுடன் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சிம்பு.
 இருவருக்கும் இடையே, மீண்டும் காதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்த தகவலால், ஹன்சிகா அதிருப்தி அடைந்ததாகவும் தகவல் வெளியானது. ஆனால், இதை மறுத்த சிம்பு, நயன்தாரா என் தோழி; ஹன்சிகா என் காதலி என, கூறியிருந்தார். ஆனால், ஹன்சிகா தரப்பில், எந்த ரியாக் ஷனும் இல்லை. இதற்கிடையே, காதலர் தினத்தை ஒட்டி, ஹன்சிகா, சமூக வலைத் தளமான, டுவிட்டர்ல், சமீபத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இன்று, காதலர் தினம்; ஆனாலும், நான், சிங்கிள் ஆகத் தான் (தனியாக) இருக்கிறேன் என, தெரிவித்துள்ளார்.
 இதனால், சிம்புவுக்கும், அவருக்கும் இடையேயான காதலில், விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், சிம்புவிடமிருந்து, விலகிச் செல்லும் எண்ணத்தில் தான், இந்த செய்தியை அவர் வெளியிட்டுள்ள தாகவும், கோடம்பாக்கம் வட்டாரங்கள் கூறுகின்றன.

No comments :

Post a Comment