விவகாரத்து அளவுக்கு செல்லமாட்டோம் - ப்ரியதர்ஷன்!!

No comments
தமிழ், மலையாளம், இந்தி என மூன்று மொழிகளிலும் ஏராளமான படங்களை இயக்கியிருப்பவர் ப்ரியதர்ஷன். தமிழில் கோபுர வாசலிலே, சிறைச்சாலை, லேசா லேசா, சினேகிதியே, காஞ்சிவரம் போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். இவர் 1990ல், தமிழில் விக்ரம், மனசுக்குள் மத்தாப்பூ உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்த லிசியை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், ப்ரியதர்ஷனுக்கும், லிசிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர்கள் பிரிந்து வாழ்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 இதையடுத்து, விவாகரத்து கோரியிருக்கும் லிசி, ஜீவனாம்சமாக 80 கோடி தனக்கு தரவேண்டுமென்று கூறி வருவதாகவும் பரபரப்பு செய்திகள் உலவுகின்றன. ஆனால், இந்த விகாகரத்து, ஜீவனாம்சம் குறித்த செய்தியை மறுத்துள்ளார் ப்ரியதர்ஷன். இதுபற்றி அவர் விடுத்துள்ள செய்தியில், எனக்கும், லிசிக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நாங்கள் பிரிந்து வாழ்வது உண்மைதான். ஆனால், விவாகரத்து செய்து கொள்ளும் அளவுக்கெல்லாம் நாங்கள் செல்லமாட்டோம்.
 எல்லா வீடுகளிலும் ஏற்படுவது போன்று எங்களுக்குள் சில பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது. அதை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கும் முயற்சியில் எங்கள் குடும்பத்தார் ஈடுபட்டுள்ளனர். அதனால் கூடிய சீக்கிரமே சுமூகமான நிலை ஏறப்ட்டு விடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

No comments :

Post a Comment