அஞ்சான் படத்திற்காக சூர்யா பாடும் டூயட் பாடல்!
அஞ்சான் படத்தில் சூர்யா முதன் முறையாக டூயட் பாடல் ஒன்றை பாடப் போகிறாராம்.
சிங்கம்-2 படத்திற்கு பிறகு ”சூர்யா” நடித்து வரும் படம் ”அஞ்சான்”. இந்த படத்தை ”லிங்குசாமி” தயாரித்து இயக்குகிறார். முதல் முறையாக சூர்யாவுக்கு ஜோடியாக ”சமந்தா” நடிக்கிறார். மேலும் இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய், துப்பாகி பட வில்லன் வித்யூத் ஜம்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்நிலையில் அஞ்சான் படத்திற்காக சூர்யா முதன் முறையாக பாடல் ஒன்றை பாடப் போகிறார். ஏற்கெனவே அவர், விளம்பரப்பாடல் ஒன்றை பாடி நடிக்கவும் செய்துள்ளார். எனவே, அவரிடம் படத்தில் பாடல் ஒன்றை பாடும்படி இயக்குனர் லிங்குசாமி கேட்டுக்கொண்டிருக்கிறார். இதையடுத்து சூர்யா வேறு வழியின்றி ஒரு டூயட் பாடலை பாட ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் அவருடன் இணைந்து இளம் முன்னணி நடிகை ஒருவரும் பாட இருக்கிறாராம். விரைவில் இந்த பாடலுக்கான ஒலிப்பதிவு நடைபெற உள்ளதாம்.
கமல்ஹாசன், விஜய், தனுஷ், சிம்பு போன்ற முன்னணி நடிகர்கள் தங்கள் படங்களில் பாடுவதோடு மட்டுமின்றி பிற படங்களிலும் நட்புக்காக பாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
கோச்சடையான் படத்தில் கூட ரஜினிகாந்த் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த வரிசையில் தற்போது சூர்யாவும் தன்னை இணைத்துக்கொண்டார். பல புதுமைகளுடன் உருவாகி வரும் இப்படத்தினை ‘ரெட் டிராகன்’ என்ற அதிநவீன கேமராவை வைத்து படம் பிடித்து வருகிறார் சந்தோஷ் சிவன். உலகிலேயே இந்த கேமராவை பயன்படுத்தும் முதல் திரைப்படம் ‘அஞ்சான்’ என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment