நிமிர்ந்து நில் இனி வீரநடை போடும்: ஜெயம் ரவி

No comments
ஜெயம் ரவி-அமலாபால் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘நிமிர்ந்து நில்’. இப்படத்தை ‘நாடோடிகள்’ படத்தை இயக்கிய சமுத்திரகனி இயக்கியுள்ளார். ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் நேற்று வெளியாவதாக இருந்தது. ஆனால், ஒரு சில காரணங்களால் படத்தை வெளியிட முடியாமல் போனது. இதையடுத்து இன்று இப்படம் அனைத்து திரையரங்குகளிலும் மாலை 6.30 மணி முதல் வெளியாகும் என இப்படத்தை தயாரித்த வாசன் விஷுவல் வென்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. 
 இந்நிலையில் இப்படத்தின் நாயகன் ஜெயம் ரவி படத்தை வெளியிட ஏற்பட்ட சிரமங்கள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இது யாருக்குமே கடினமான ஒன்றுதான். எனக்கு மட்டுமல்ல, எல்லாருக்கும் தங்கள் திரைவாழ்க்கையில் முக்கியமான படங்களை வெளியிடும் சமயத்தில் இதுபோன்ற சிரமங்கள் ஏற்படுவது சகஜம். 
நாம் அதை எதிர்கொள்ள வேண்டும். சிரமங்கள் கடினமாக செல்ல செல்ல நாம் முயன்று கொண்டே இருக்க வேண்டும். இந்த கடினமான சூழ்நிலையில் நான் என்னுடைய நண்பர்கள், திரைத்துறை கலைஞர்கள் மற்றும் ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றியை கூறிக்கொள்கிறேன். ‘நிமிர்ந்து நில்’ இனி வீரநடை போடும் என்று கூறியுள்ளார்.

No comments :

Post a Comment