10 மணி நேரம் தண்ணீரில் மிதந்த லட்சுமி மேனன்!!
கும்கி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டியநாடு என்று தொடர் ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகை லட்சுமி மேனன். இவர் இப்போது மஞ்சப்பை, நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.
அதிலும் பாண்டியநாடு ஹிட்டுக்கு பிறகு விஷாலுடன் இரண்டாவது முறையாக நான் சிகப்பு மனிதன் படத்தில் நடித்து வருகிறார். விஷாலே தயாரிக்கும் இப்படத்தை திரு இயக்குகிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் இப்படத்தின் ஷூட்டிங் நடந்தபோது லட்சுமி மேனனை, கிட்டத்தட்ட 10 மணிநேரம் தண்ணீரில் மிதக்கவிட்டுள்ளார் இயக்குநர் திரு. இதற்காக சென்னையை ஒட்டியுள்ள கடற்கரையில் லட்சுமி மேனனை தண்ணீரில் இறக்கிவிட்டு படமாக்கியுள்ளார் திரு.
இதுப்பற்றி நடிகை லட்சுமி மேனன் கூறும்போது, கும்கி படத்திற்கு பிறகு நான் சிகப்பு மனிதன் படத்திற்காகத்தான் ரொம்பவும் கஷ்டப்பட்டு நடித்தேன்.
அதிலும் தண்ணீரில் சுமார் 10 மணிநேரம் என்னை மிதக்கவிட்டுவிட்டார் இயக்குநர். அதற்காக நான் வருத்தப்படவில்லை. கஷ்டப்பட்டால் தான் முன்னேற முடியும். இதுவரை நான் நடித்த படங்கள் கஷ்டப்பட்டு நடித்ததால் தான் வெற்றி பெற்றுள்ளன.அதேப்போல் இந்தப்படமும் வெற்றி பெறும் என்று கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment