மதுரைக்காரர்கள் பாசமானவர்கள் - லட்சுமி மேனன்

No comments
கும்கி,சுந்தரபாண்டியன்,குட்டிபுலி,பாண்டியநாடு என,லட்சுமி மேனன் நடித்து வெளியான அத்தனை படங்களுமே, ஹிட்டடித்ததால்,கோலிவுட்டின் ராசியான நடிகையாகி விட்டார். அவர் கூறுகையில், விஷால், சித்தார்த் என, முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பது, ரொம்ப சந்தோஷமாக உள்ளது. இன்னும் எஞ்சியுள்ள முன்னணி ஹீரோக்களுடனும், நடிக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன் என்கிறார். மதுரை கதை களத்தில், நான் நடித்த, சுந்தரபாண்டியன், பாண்டியநாடு எனக்கு பெரிய ஹிட் படங்களாக அமைந்ததால், இப்போது, ஜிகர்தண்டா படத்திலும் மதுரைக்கார பெண்ணாக நடித்துள்ளேன் என்கிறார். 
இந்த படத்தின் படப்பிடிப்புக்காக, மதுரைக்கு சென்றிருந்த போது, அங்குள்ள மக்கள் ரொம்ப பாசமாக பழகினார்களாம்.

No comments :

Post a Comment