கோச்சடையான் விழாவில் ரஜினி புது பட அறிவிப்பு
ரஜினியின் கோச்சடையான் படம் மெகா பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. அவதார், டின்டின் போன்ற ஹாலிவுட் படங்கள் சாயலில் எடுத்துள்ளனர்.
இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் நாளை காலை 10 மணிக்கு நடக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக இந்தி நடிகர் ஷாருக்கான் பங்கேற்கிறார்.
இந்த விழாவில் ரஜினி தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுறிது. எந்திரன் படத்துக்கு பின் கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் படத்தில் ரஜினி நடிப்பதாக இருந்தது. அந்த படத்துக்கு ராணா என பெயரிட்டனர்.
ஆனால் பட பூஜையில் ரஜினிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் படம் நின்று போனது. அதன் பிறகு உடல் நிலை சரியான பிறகு சவுந்தர்யா இயக்கிய கோச்சடையானில் நடித்தார். இது 3டி மோஷன் பிக்சர்ஸ் தொழில் நுட்பத்தில் தயாராகியுள்ளது.
ஏப்ரல் மாதம் இப்படம் ரிசீலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்துக்கு பிறகு ரஜினி கே.எஸ். ரவிகுமார் இயக்கத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் பேசி வருகின்றனர். இந்த படம் பற்றிய முழு தகவலையும் நாளை ரஜினி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment