விஜயசேதுபதி-நந்திதாவின் கெமிஸ்ட்ரி மீண்டும் ஒர்க்அவுட் ஆகிறது!

No comments
அட்டகத்தி படத்தில் தமிழுக்கு வந்தவர் கன்னட நடிகை நந்திதா. முதல் படத்திலேயே யதார்த்தமாக நடித்ததால் அதன்பிறகு எதிர்நீச்சல், இதற்குதானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்பட சில படங்களில் நடித்தார் நந்திதா. அந்த இரண்டு படங்களுமே வெற்றி பெற்றதால் இப்போது ராசியான நடிகையாகி விட்டார். குறிப்பாக, இதற்குதானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் விஜயசேதுபதிக்கும், அவருக்குமிடையே நல்லதொரு கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட்டாகியிருந்தது. அதைப்பார்த்த டைரக்டர் சீனுராமசாமி, விஷால், விஷ்ணுவைக்கொண்டு தான் இயக்கும் இடம் பொருள் ஏவல் படத்துக்கு இப்போது விஜயசேதுபதியின் ஜோடியாக நந்திதாவையே புக் பண்ணியிருக்கிறார். 
 இதற்கு முன்பு, இதே வேடத்துக்கு வழக்கு எண் மனீஷா யாதவைதான் புக் பண்ணியிருந்தார். ஆனால் அந்த வில்லேஜ் கெட்டப்புக்கு அவரது நடிப்பு எடுபடவில்லை என்று அவரை நீக்கி விட்டு, இப்போது நந்திதாவை புக் பண்ணியிருக்கிறார். இதனால் அதிக உற்சாகமடைந்துள்ள நந்திதா, ஏற்கனவே வில்லேஜ் கெட்டப்புகளில் தான் ப்ரூப் பண்ணியிருப்பதால், இந்த படத்தில் இன்னும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கோலிவுட்டில் ஆழக்காலூன்ற களமிறங்கி விட்டார். 
 இதனால், முந்தைய படத்தைவிட இந்த படத்தில் விஜயசேதுபதி-நந்திதாவின் கெமிஸ்ட்ரி மிகப்பெரிய அளவில் ஒர்க்அவுட்டாகும் என்று தெரிகிறது.

No comments :

Post a Comment