மீண்டும் பரபரப்பான இளையராஜாவும், பிஸியான பிரசாத் ஸ்டுடியோவும்...!!

No comments
சுவாசிக்கும் காற்றுக்கே சுரங்கள் போட்டு தந்தவர் இளையராஜா, தன் இசையால் அனைத்தையும் இயங்க வைத்தவர். சமீபத்தில் உடல்சுகவீனம் காரணமாக இசையமைக்காமல் இருந்தார் அவர். ஆனால் அவரது உடல் நலம் எப்போது நலம் பெற்றதோ, அடுத்த நிமிடமே மீண்டும் இசைக்கு உயிர் மீட்ட தொடங்கி விட்டார். அவரால் இசையையும், இசையால் அவரையும் விட்டு பிரியாமல், மெட்டு பிறந்து, பல புதிய படங்களுக்கு இசை அமைக்க தொடங்கியவர், சமீபத்தில் பிரசாத் ஸ்டுடியோவில் நாள் முழுக்க இசை அமைப்பு, இசை பாட்டு பயிற்சி என்று பிஸியாக காணப்படுகிறார். 
பாடகர்கள், இசை சேர்ப்பாளர்கள் என்று ஒரு குழு இயங்கி வருகிறது. மழை வருமுன் தென்றல் காற்று வீசுவது போல, விரைவில் ராஜாவின் இன்னிசை மழை எங்கோ கேட்கபோகிறது. விரைவில் புதிய தகவல்களுடன் நாம் சந்திப்போம்.

No comments :

Post a Comment