நியூசிலாந்தில் பாய் ப்ரண்டுகளுடன் ஊர் சுற்றிய மதுரிமா!

No comments
தெலுங்கு, இந்தியில் பல படங்களில் நடித்தவர் மதுரிமா. தற்போது தமிழில் வினய்யுடன் சேர்ந்து போலாமா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் படப்பிடிப்பு நியூசிலாந்தில் நடைபெற்றபோது மதுரிமா படப்பிடிப்புக்கு போதிய ஒத்துழைப்பு கொடுக்காமல் டார்ச்சர் கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. தினமும் படப்பிடிப்பு காலை 7 மணிக்கு தொடங்கினால் 10 மணிக்குத்தான் ஸ்பாட் பக்கம் வருவாராம். அப்படியே வந்தாலும் நடிப்பில் ஈடுபாடு இல்லாமலேயே நடித்திருக்கிறார். மேலும், அந்த நாட்டில் வெளிநாட்டவர் கண்டபடி ஊர் சுற்றக்கூடாது என்று கண்டிசன்கள் இருந்தபோதும், தனது பாய் ப்ரண்டுகளுடன் அடிக்கடி ஊர் சுற்றியிருக்கிறார் மதுரிமா. இதனால் அவரை வைத்து படப்பிடிப்பு நடத்த ரொம்ப கஷ்டப்பட்டார்களாம். 
 ஆனால், இதுகுறித்து மதுரிமா கூறுகையில், நான் மும்பை பெண். அதனால் முதலில் இந்தியில்தான் அறிமுகமானேன். அதையடுத்து தெலுங்குக்கு வந்து 10 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன். இப்போது வரை நல்ல நடிகை என்றுதான் பெயரெடுத்திருக்கிறேன். 
 ஆனால் இவர்கள் அப்படி சொல்கிறார்கள் என்றால் அதற்கு நான் காரணமல்ல. அவர்கள்தான் முழுக்காரணம் என்று சொல்லும் மதுரிமா, என்னிடம் நியூசிலாந்து சென்றதும் ஒரு குறிப்பிட்ட தொகை சம்பளத்தை தருவதாக சொன்னவர்கள், பேசினபடி நடந்து கொள்ளவில்லை. அதனால்தான் நான் நடிப்பில் போதிய ஈடுபாடு இல்லாமல் இருந்தேன். என்னைப்பொறுத்தவரை யாராக இருந்தாலும் சொன்னபடி நடந்து கொள்ள வேண்டும் . இல்லையேல் நானும் சொன்னபடி நடந்து கொள்ள மாட்டேன் என்கிறார் மதுரிமா.

No comments :

Post a Comment