நடிகர் ராஜாவை வாழ்த்திய சூப்பர் ஸ்டார்!

No comments
தமிழில் கண்ணா, ஜகன்மோகினி படங்களில் நடித்தவர் ராஜா. தெலுங்கில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ராஜாவுக்கும் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் பிரெடெரிக் வின்செண்ட் மகள் அமிர்தாவுக்கும் திருமணம் நிச்சயமிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 25ந் தேதி சென்னையில் திருமணம் நடக்கிறது. மணமகளின் தந்தையான பிரெடெரில் சூப்பர் ஸ்டாரின் நெருங்கிய நண்பர். இதனால் அவர் மணமக்களை அழைத்துக்கொண்டு சூப்பர் ஸ்டாரை சந்தித்து திருமண அழைப்பிதழை கொடுத்தார்.
 அப்போது மணமக்களை வாழ்த்திய ரஜினி தனது நண்பரோடு பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். பிரெடரிக் வீட்டில் உள்ள ஒவ்வொருவரையும் பெயர் குறிப்பிட்டு நலம் விசாரித்தார். திருமணத்துக்கு கண்டிப்பாக வருவதாகவும் கூறினார்.

No comments :

Post a Comment