அப்பா கமல் படத்தில் பின்னணி பாட ஆசைப்படும் ஸ்ருதிஹாசன்!

1 comment
கமல் நடித்த தேவர்மகன் படத்தில், இளையராஜாவின் இசையில் பொற்றிப்பாடடி பெண்ணே என்று சிவாஜியை புகழ்ந்து பாடும் பாடலில் ஸ்ருதிஹாசனும் குழந்தை குரலில் பாடினார். அதையடுத்து இளையராஜா உள்பட பல இசையமைப்பாளர்களின் இசையிலும், பின்னணி பாடி வந்திருக்கிறார். அந்த வகையில, சிறு வயதில் இருந்தே இசையில் அதிக ஈடுபாடு கொண்டவரான ஸ்ருதிஹாசனை, தனது உன்னைப்போல் ஒருவன் படத்தில் இசையமைப்பாளராகவே அறிமுகம் செய்தார் கமல். மிகப்பெரிய என்ட்ரியை அவர் கொடுத்தபோதும் அதன்பிறகு ஸ்ருதிஹாசனுக்கு இசையமைக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
 மாறாக, நடிப்பதற்கே சான்ஸ் கிடைத்தது. அதனால் லக் என்ற இந்தி படத்தில் நடிகையாக பிரவேசித்த அவர் தற்போது இந்திய அளவில் பேசப்படும் நடிகையாகி விட்டார். இந்த நிலையில், தனது தந்தை கமலுடன் நடிப்பதற்கு இரண்டு முறை வாய்ப்புகள் தேடிவந்தும், கால்சீட் இல்லை என்று தவிர்த்து விட்டார் ஸ்ருதி. இருப்பினும், அப்பாவுடன் நடிக்கும் சூழ்நிலைகள் அமையாதபோதும், அவர் நடிக்கும் படத்தில் தனது பங்களிப்பை செலுத்த ஆசைப்படுகிறார் ஸ்ருதி. 
அதனால் விஸ்வரூபம்-2 படத்தையடுத்து கமல் நடிக்கும் உத்தமவில்லன், த்ரிஷ்யம் ரீமேக் படங்களில் பின்னணி பாடும் வாய்ப்பு கேட்டுள்ளாராம் அவர். ஆக, சமீபத்தில் என்னமோ ஏதோ, மான்கராத்தே படங்களில பின்னணி பாடிய ஸ்ருதிஹாசன், விரைவில் கமல் படங்களிலும் பின்னணி பாடுவார் என்று தெரிகிறது.

1 comment :

  1. Top 10 best slots casinos for 2021 - SOL.EU
    Best aprcasino Slots ventureberg.com/ Casino: Best Real Money Slots https://deccasino.com/review/merit-casino/ Sites 2021 · Red Dog Casino: https://septcasino.com/review/merit-casino/ Best Overall Slots Casino For USA https://sol.edu.kg/ Players · Ignition Casino: Best Casino For Roulette

    ReplyDelete