பாலாவுடன் இணையும் விஜய் சேதுபதி!

No comments
விஜய் சேதுபதி தற்போது ‘வசந்தகுமாரன்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இப்படத்தை இயக்குனர் பாலா, தனது பி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாக, ஸ்டுடியோ நைன் புரொடக்சன்ஸுடன் இணைந்து மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஆனந்த் குமரேசன். இவர், ஏற்கெனவே ‘செம ரகளை’, ‘எதிரி எண் 3’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியவர். இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ஐஸ்டின் பிரபாகரன் இசையைமக்கிறார்.
 தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். கதாநாயகிகள், மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்க இருக்கிறது. ஒரு அழகான காதல், இனிமையான குடும்ப பின்னணியில் ஜனரஞ்சமாக உருவாக உள்ளது

No comments :

Post a Comment