குறளரசன் இசையில் பாடும் டி.ஆர்., சிம்பு!
ஏற்கனவே தான் இயக்கி, இசையமைத்து நடித்த பல படங்களில் தனக்குத்தானே பின்னணியும் பாடியவர் டி.ராஜேந்தர். குறிப்பாக தங்கையை நினைத்து உருகிப்பாடும் பாடல்களென்றால் அதை கேட்கும் அத்தனை அண்ணன்மார்களையும் கரைய வைத்து விடுவார் மனிதர்.
அப்படிப்பட்ட டி.ஆர்., தனது மகன் சிம்புவுக்காகவும் அம்மாடி ஆத்தாடி உன்ன எனக்கு தறியாடி -என்று ஒரு ஹிட் பாடலை பாடினார். அதையடுத்து மீண்டும் சிம்புவுக்காக, இது நம்ம ஆளு படத்திலும் தனது இளைய மகன் குறளரசனின் இசையில் இன்னொரு பாடலை பாடப்போகிறாராம் டி.ஆர்.,
குறளரசனைப்பொறுத்தவரை இது தனக்கு முதல் படம் என்பதால், எப்படியும் மெகா ஹிட் பாடல்களை கொடுத்து விட வேண்டும் என்பதில் தீவிரமாகியிருக்கிறார்.
அதனால் படத்திற்கேற்ப மொத்த டியூன்களையும் ரெடி பண்ணி விட்ட அவர், அதில் தனது, தந்தை டி.ராஜேந்தரும், அண்ணன் சிம்புவும், பாடினால் சிறப்பாக இருக்கும் என்று அவர்களிடம் தனது விருப்பத்தை சொல்ல, உடனே ஓ.கே சொல்லி விட்டார்களாம்.
ஆக, தனது முதல் படத்திலேயே அப்பா, அண்ணன் என இருவரையும் பின்னணி பாட வைத்த பெருமையை பெறுகிறார் குறளரசன்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment