கையை இழுத்து ரகளை: ரசிகர்களிடம் சிக்கிய பிரியாஆனந்த்

No comments
நடிகை பிரியா ஆனந்த் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி தவித்தார். மயிலாடு துறையில் நடந்த ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படப் பிடிப்பில் இச்சம்பவம் நடந்துள்ளது. இப்படம் ரெயிலில் நடக்கும் கதையாகும். கண்ணன் இயக்குகிறார். மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் விசேஷ அனுமதி பெற்று ஓடும் ரெயிலை போல என்ற பாடல் காட்சியை அவர் பட மாக்கினார். விமல், சூரி, பிரியா ஆனந்த் மூவரும் நடித்தனர். படப்பிடிப்பை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். காலை 7 மணியில் இருந்து மாலை வரை ஆயிரக் கணக்கானோர் கூடி நின்றார்கள். 
ரெயில் நிலையம் ரசிகர்கள் கூட்டத்தில் நிரம்பி வழிந்தது. பக்கத்து ஊர்களில் இருந்தும் ரசிகர்கள் வந்து இருந்தார்கள். சுமார் ஒரு லட்சம் பேர் கூடினார்கள். அவர்கள் விமல், பிரியா ஆனந்தை பார்த்து கூச்சல் போட்டபடி இருந்தனர். சூரி படங்களில் பேசிய காமெடி வசனத்தை சொல்லியும் கலாய்த்தார்கள். டைரக்டர் கண்ணன் ரசிகர்களை அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார். 
ஆனாலும் கூச்சல் நீடித்தது. இதனால் படப்பிடிப்பை தொடர முடியாமல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. விமல், பிரியா ஆனந்த் கேரவனுக்குள் அனுப்பப்பட்டனர். அப்போது ரசிகர்கள் பிரியா ஆனந்தை மறித்தனர். ஆட்டோ கிராப் கேட்டனர். சிலர் சேர்ந்து நின்று போட்டோ எடுத்துக் கொள்ள முயற்சித்தனர். இன்னும் சிலர் அத்து மீறி கையை பிடித்து இழுத்து ரகளை செய்தார்கள். பிரியா ஆனந்த் கூட்டத்தில் சிக்கி தவித்தார். 
பாதுகாவலர்கள் சிரமப்பட்டு ரசிகர்கள் பிடியில் இருந்து பிரியா ஆனந்தை மீட்டு வேனுக்குள் அனுப்பி வைத்தனர். இது எனக்கு பயங்கரமான அனுபவம் என்றார் பிரியா ஆனந்த். டைரக்டர் கண்ணன் கூறும் போது, படப்பிடிப்பை பார்க்க சிதம்பரம், கடலூர், பகுதிகளில் இருந்தெல்லாம் ரசிகர்கள் லாரிகளில் வந்து கூடினார்கள். சுமார் ஒன்றரை லட்சம் பேர் திரண்டனர். 
போலீசாராலும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. ஏற்கனவே ரெயில் நிலையத்தை பணம் கட்டி வாடகைக்கு எடுத்து விட்டோம். படப்பிடிப்பை நிறுத்தினால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படும். எனவே கஷ்டத்தை பொறுத்துக் கொண்டு படப்பிடிப்பை நடத்தினேன் என்றார்.

No comments :

Post a Comment