நயன்தாராவின் வாய்ப்பை தட்டிப்பறித்த காஜல்அகர்வால்!

No comments
நீ எங்கே என் அன்பே படத்தை முடித்து விட்ட நயன்தாரா, அடுத்தபடியாக சிம்புவுடன் இது நம்ம ஆளு, ஜெயம் ரவியுடன் தனி ஒருவன் போன்ற படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் இந்த படங்களில் நடித்துக்கொண்டே இடையிடையே புதுப்பட வேட்டையிலும் ஈடுபட்டு வந்தார். அதில், ஜீவா நடிக்கும் படமொன்றில் இடம் பிடிக்கவும் சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தையை முடுக்கி விட்டிருந்தார். ஆனால், ஜில்லாவுக்கு பிறகு தெலுங்கு படங்களில் நடித்து வரும் காஜல்அகர்வால், சமீபத்தில் தனுஷ் படமொன்றில் கமிட்டாக சென்னை வந்தவர், ஜீவா அடுத்து நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கு இன்னும் கதாநாயகி கமிட்டாகவில்லை என்பதை கேள்விப்பட்டு அப்படத்தை தயாரிக்கும் ஆர்.பி.செளத்ரியை சந்தித்தாராம். 
 தற்போது, காஜல் அகர்வால், தெலுங்கில் ராம்சரண்தேஜா, மகேஷ்பாபு போன்றவர்களுடன் நடித்து வருவதால். இவரை புக் பண்ணினால், தெலுங்கிற்கும் படத்தை நல்ல விலைக்கு விற்று விடலாம் என்று வியாபார நோக்கில் சிந்தித்த அவர், உடனடியாக காஜலை புக் பண்ணிவிட்டாராம். இதையடுத்து, தான் பேசிக்கொண்டிருந்த படத்தை கடைசி நேரத்தில் காஜல் புகுந்து அபகரித்துக்கொண்டதால் அவர் மீது செம காண்டில் இருக்கிறார் நயன்தாரா.

No comments :

Post a Comment