இளவட்ட நடிகர்களை ஆச்சர்யப்படுத்தும் கமலின் அதிரடி வேகம்!
அஜீத், விஜய் உள்ளிட்ட இளவட்டங்களே வருடத்திற்கு ஒரு படம் என்கிற நிலையில் நின்று கொண்டிருக்க, சீனியர் நடிகரான கமலோ, வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்களை கொடுக்கும் அளவுக்கு விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார்.
அதிலும், நடிப்பு என்பதை மட்டும் கையில் எடுத்துக்கொள்ளாமல், நடித்துக்கொண்டே படத்தை இயக்குவது, அல்லது கதை வசனம் எழுதுவது என்று பல முகங்களை காட்டி வருகிறார் கமல்.
அந்த வகையில், விஸ்வரூபம்-2 படத்தை இயக்கி நடித்து முடித்து விட்டவர், இப்போது போஸ்ட் புரொடக்சன் வேலைகளில் ஈடுபட்டிக்கிறார்.
இதற்கிடையே ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் அவர் நடிக்கும் உத்தமவில்லன் பட வேலைகளும் தொடங்கப்பட்டு விட்டது.
இந்த படத்தை இன்னும் 6 மாதத்திற்குள் ரசிகர்களின் பார்வைக்கு கொடுத்து விட வேண்டும் என்று திட்டமிட்டிருக்கும் கமல், அதை மனதில் கொண்டு வேகமாக இயங்கிக்கொண்டிருக்கிறார்.
அதோடு, உத்தம வில்லனை முடிக்கும் தருவாயில் இருக்கும்போதே, த்ரிஷ்யம் ரீமேக்கிலும் நடிக்கிறார்.
ஆக, அந்த படமும் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்டு விடும் நிலை உள்ளது.
அதனால், ஓய்வு கொடுக்காமல் தினமும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு மின்னல் வேகத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறார் கமல்.
அவருக்கு ஒன்றும் இது புதிது இல்லை என்றாலும், தாங்களெல்லாம் வருடம் ஒரு படம் கொடுத்துக்கொண்டிருக்க கமலோ, வருடத்திற்கு மூன்று படம் வரை கொடுத்து விடுவார் போலிருக்கே என்று கோடம்பாக்கத்தின் முன்னணி இளவட்ட நடிகர்கள் ஆச்சர்யத்தில் உறைந்து போய் நிற்கிறார்கள்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment