சிம்பு தேவனுக்கு டேட் கொடுத்த விஜய்

No comments
இளையதளபதி விஜய் இயக்குனர் ஏ.ஆர்-முருகதாஸ் படத்தில் நடித்துக்கொண்டிருப்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். இந்தப் படம் தொடங்கப்பட்டதிலிருந்தே விஜயின் அடுத்த படம் குறித்து தகவல்கள் வெளியாகத் தொடங்கிவிட்டன. அந்த வரிசையில் விஜயின் அடுத்த படத்தை இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தை இயக்கிய சிம்புதேவன் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிம்புதேவன் தான் எழுதிய திரைக்கதையை ஃப்ரேம் ஃப்ரேமாக விளக்கி விஜயை அசத்தியுள்ளதால் இப்படத்திற்கு அவர் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. 
 இதையடுத்து செப்டம்பர் மாதத்திலிருந்து சிம்புதேவன் படத்தில் நடிப்பதற்கான இளையதளபதி கால்ஷீட் கொடுத்திருப்பதாக செய்தி வெளிவந்துள்ளது. இந்தப்படத்தில் இரண்டு நாயகிகளாம், முக்கிய நாயகி வேடத்தில் நடிக்க பிரியங்கா சோப்ராவிடம் பேச்சுவார்த்தை நடந்தப்பட்டு வருகின்றது. தமிழன் படத்தி விஜய்யுடன் அறிமுகமாகி இப்போது பாலிவுட்டை கலக்கிக்கொண்டிருக்கும் அதே பிரியங்கா சோப்ராதான்.

No comments :

Post a Comment