கடன் பாக்கி - ஜெயம் ரவியின், நிமர்ந்து நில் இன்று ரிலீசாகவில்லை!

No comments
ஆதிபகவன் படத்தின் தோல்விக்கு பிறகு ஜெயம் ரவி நடிப்பில் வெளியாக இருக்கும் முக்கியமான படம் ''நிமிர்ந்து நில்''. சமுத்திரகனியின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். முக்கிய கேரக்டரில் சரத்குமார் நடித்துள்ளார். இப்படத்திற்காக ரொம்பவே கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார் ஜெயம் ரவி. மேலும் இப்படம் எங்களது சினிமா கேரியரில் முக்கியமான படமாக இருக்கும் என்று ஜெயம் ரவி, அமலாபால், சமுத்திர கனி உள்ளிட்ட ஒவ்வொருவரும் தனித்தனியாக பேட்டி கொடுத்துள்ளனர். 
இந்நிலையில் ஆரம்பத்தில் இருந்தே நிதி சிக்கலில் தவித்து வந்த நிமிர்ந்து நில் படம் ஒருவழியாக இன்று(மார்ச் 7ம் தேதி) ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஏற்பட்ட சில கடன் சிக்கல்களால் இப்படம் இன்று ரிலீஸாகவில்லை. இதுப்பற்றி விசாரித்ததில், நிமிர்ந்து நில் படத்தை தயாரித்துள்ள வாசனன் விஸ்வல் வென்சர்ஸ் தயாரிப்பாளரான கே.எஸ்.சீனிவாசன் ஏற்கனவே தான் தயாரித்த சில படங்களுக்கு சுமார் 4 கோடி ரூபாய் வரை கடன் பாக்கி வைத்திருக்கிறார். 
இதனால் சம்பந்தப்பட்டவர்கள் தயாரிப்பாளர்களிடம் சென்று எங்களுக்கு ஏற்கனவே கொடுக்க வேண்டிய கடனை கொடுத்து விட்டு படத்தை ரிலீஸ் செய்யுங்கள் என்று கூறியுள்ளனர். ஆனால் சீனிவாசனால் பணத்தை கொடுக்க முடியவில்லை. மேலும் இதுதொடர்பாக படத்தின் ஹீரோ ஜெயம் ரவி, இயக்குநர் சமுத்திரகனி ஆகியோரிடமும் முறையிட்டுள்ளது. ஜெயம் ரவியோ, ஏற்கனவே நான் இந்தப்படத்திற்காக ரூ.90 லட்சம் விட்டுக்கொடுத்துள்ளேன் என்னால் இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறிவிட்டார். 
அதேப்போல் சமுத்திரகனியும், நானும் சுமார் ரூ.50 லட்சம் விட்டுக் கொடுத்துள்ளேன் என்று கைவிரித்துவிட்டார். சீனிவாசன், கடனை திருப்பி செலுத்ததால் இன்று வெளியாக இருந்த நிமிர்ந்து நில் படம் ரிலீஸாகவில்லை. அதேசமயம் படத்தை ரிலீஸ் செய்வதற்கு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் சுமூகமான தீர்வு ஏற்படும் பட்சத்தில், படம் நாளை ரிலீஸ் ஆகலாம் என தெரிகிறது.

No comments :

Post a Comment