கோச்சடையான் கார்ட்டூன் படமல்ல, அனிமேஷன் படம்! ரசிகர்களை தெளிவுபடுத்தும் செளந்தர்யா!!

No comments
கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஜினியின் கோச்சடையான் படத்தின் ஆடியோ, டிரைலர் வெளியீட்டு விழா நடந்ததையடுத்து அப்படத்தின் பாடல் மற்றும் டரைலரும் யு.டியூப்பில் வெளியிடப்பட்டது. அதை இரண்டே நாளில் 12 லட்சம் ரசிகர்கள் கண்டு களித்துள்ளனர். அதைப்பார்த்து சில ரசிகர்கள் ஆச்சர்யத்தை வெளியிட்டபோதும், பலர் இதென்ன கார்ட்டூன் படம் மாதிரி உள்ளது என்று அதிருப்தியை தெரிவித்துள்ளார்களாம். ரசிகர்களின் இந்த கருத்து அப்படத்தின் டைரக்டரான செளந்தர்யாவை பெரும் அதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது. அதையடுத்து ரசிகர்களை தெளிவுபடுத்தும் முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டிருக்கிறார். 
 அதையடுத்து செளந்தர்யா வெளியிட்டுள்ள செய்தியில், கோச்சடையானை கார்ட்டூன் படம் என்று நினைக்கக்கூடாது. இதுஒரு அனிமேஷன் படம். அவதார், டின் டின் போன்ற படங்களை எப்படி ரசித்தீர்களோ அதேபோன்ற மனநிலையுடன் ரசிக்க வேண்டும். மாறாக, ரஜினியின் முந்தைய படங்களை மனதில் கொண்டு இப்படத்தை பார்க்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
 மேலும், கோச்சடையானில் நிஜ ரஜினியை திரையில் பார்க்க முடியாது. அனிமேஷன் வடிவில்தான் பார்க்க முடியும். ஆனால், எல்லா வகையிலும ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில், இப்படம் ரஜினியின் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாகவே இருக்கும் என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறார் செளந்தர்யா.

No comments :

Post a Comment