ஆஸ்கார் விருது: 7 விருதுகளை குவித்த 'தி கிரேவிட்டி'

No comments
இந்த ஆண்டு அதிக விருதுகளை தி கிரேவிட்டி படம் தட்டிச் சென்றுள்ளது. ஹாலிவுட் படங்களுக்கு கிடைக்கும் உச்ச கௌரவமாக கருதப்படும் இந்த வருடத்திற்கான அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எதிர்பார்த்ததைப் போலவே ‘கிராவிட்டி’ படம் 7 அவார்டுகளை அள்ளிக் குவித்தது. அதேபோல, டேலஸ் பையர்ஸ் கிளப், 12 இயர்ஸ் எ ஸ்லேவ் ஆகிய திரைப்படங்கள் 3 விருதுகளையும், லியார்னடோ டிகாப்பிரியோ நடித்த தி கிரேட் கேட்ஸ்பை, அனிமேஷன் படமான ஃப்ரோஸன் ஆகியவை 2 விருதுகளையும் பெற்றன. 
 முழுமையான ஆஸ்கர் விருதுப் பட்டியல், சிறந்த படம்: 12 இயர்ஸ் எ ஸ்லேவ் சிறந்த இயக்குனர்: அல்போன்ஸோ குவரான் (படம் : கிராவிட்டி) சிறந்த நடிகர்: மேத்யூ மெக்கானகே (படம் : டேலஸ் பையர்ஸ் கிளப்) சிறந்த நடிகை: கேட் பிளான்செட் (படம் : ப்ளூ ஜாஸ்மின்) சிறந்த துணை நடிகர்: ஜேரெட் லெடோ (படம் : டேலஸ் பையர்ஸ் கிளப்) சிறந்த துணை நடிகை: லூப்பிடா யோங் (படம் : 12 இயர்ஸ் எ ஸ்லேவ்) சிறந்த நேரடி திரைக்கதை:
 ‘ஹெர்’ (எழுதியவர் : ஸ்பைக் ஜோன்ஸ்) சிறந்த தழுவல் திரைக்கதை: ‘12 இயர்ஸ் எ ஸ்லேவ்’ (எழுதியவர் : ஜான் ரிட்லி) சிறந்த பாடல்: ‘ஃப்ரோஸன்’ படத்தின் ‘லெட் இட் கோ....’ சிறந்த இசை: ஸ்டீவன் பிரைஸ் (படம் : கிராவிட்டி) சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: கேத்ரின் மார்டின், பெவர்லே டன் (படம்: ‘தி கிரேட் கேட்ஸ்பை’) சிறந்த எடிட்டிங்: மார்க் சங்கர், அல்போன்ஸோ குவரான் (படம் : கிராவிட்டி) சிறந்த ஒளிப்பதிவு: இம்மானுவேல் லூபஸ்கி (படம் : கிராவிட்டி) சிறந்த சவுன்ட் எடிட்டிங்: க்ளென் ஃப்ரீமேன்டில் (படம் : கிராவிட்டி) சிறந்த சவுன்ட் மிக்ஸிங்: ஸ்கிப் லீவ்ஸோ, நிவ் அடிரி, கிறிஸ்டோபர் பென்ஸ்டெட், கிறிஸ் முன்ரோ (படம் : கிராவிட்டி) சிறந்த வெளிநாட்டுப் படம்: தி கிரேட் ப்யூட்டி (இத்தாலி) சிறந்த டாக்குமென்டரி படம்: ட்வென்டி ஃபீட் ஃப்ரம் ஸ்டார்டோம் சிறந்த டாக்குமென்டரி குறும்படம்: தி லேடி இன் நம்பர் 6 சிறந்த குறும்படம்: ஹீலியம் சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்: கிராவிட்டி சிறந்த அனிமேஷன் படம்: ‘ஃப்ரோஸன்’ சிறந்த அனிமேஷன் குறும்படம்: ‘மிஸ்டர் ஹப்லோ’ சிறந்த ஒப்பனை: அட்ரிதா லீ, ராபின் மேத்யூஸ் (படம் : டேலஸ் பையர்ஸ் கிளப்) சிறந்த ஆடை வடிவமைப்பு: கேத்ரின் மார்ட்டின் (படம்: ‘தி கிரேட் கேட்ஸ்பை’)

No comments :

Post a Comment