விஷால்-லெட்சுமிமேனன் லிப்லாக் : மகளிர் அமைப்பும் களமிறங்குகிறது.?!
விஷால் நடித்த நான் சிகப்பு மனிதன் ஏப்ரல் 11 ஆம்தேதி வெளியாகிறது. இப்படத்தில் லட்சுமிமேனனின் உதட்டில் விஷால் முத்தமிடுகிற காட்சி இடம்பெறுகிறது. இந்தக்காட்சியில் லட்சுமி மேனனின் உதட்டில் நிஜமாகவே விஷால் முத்தம் கொடுத்து நடித்திருக்கிறார்..
இல்லை இல்லை..முத்தம் கொடுத்திருக்கிறார். விஷாலுக்கும் லட்சுமி மேனனுக்கும் காதல் இருப்பதாக திரையுலகில் செய்திகள் பரவி இருப்பதால், இதை புருஷன் பொண்டாட்டி சமாச்சாரமாக திரையுலகினர் ஈஸியாக எடுத்துக் கொண்டுவிட்டனர்.
லட்சுமிமேனனின் உதட்டைக் கவ்வுகிற புகைப்படங்கள் சில தினங்களுக்கு முன் மீடியாக்களில் வெளியானது. அந்தப் புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சி அடையாதவர்களே இல்லை.
அந்தளவுக்கு விஷால், லட்சுமி மேனன் முத்தக்காட்சி பல தரப்பினரிடமும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
குறிப்பாக பெண்கள் அமைப்பினரை கடும் கோபத்துக்குள்ளாக்கி இருக்கிறது. எனவே இந்த விஷயத்தை அவர்கள் கையில் எடுத்திருக்கின்றனர். லட்சுமி மேனன் – விஷால் முத்தக்காட்சியை நான் சிகப்பு மனிதன் படத்தில் அனுமதிக்கக் கூடாது என்று தணிக்கைக்குழுவில் புகார் மனு அளிக்க உள்ளனர். மேலும் இதுபோன்ற காட்சிகளை அனுமதிக்க கூடாது என போலீஸ் மற்றும் நீதிமன்றத்திடமும் முறையிட உள்ளனராம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment