புதிய கெட்டப்புடன் வெளியே தலைகாட்டிய அஜீத்!

No comments
பெரும்பாலும் படங்களுக்காக தங்களது கெட்டப்பை மாற்றிக்கொள்ளும் பிரபல நடிகர்கள், அந்த கெட்டப்புடன் வெளியில் தலைகாட்ட மாட்டார்கள். அப்படி வெளியில் லீக்அவுட்டாகி விட்டால் படங்களின் சுவராஸ்யம் குறைந்து விடும் என்பதால் தலைமறைவாக இருப்பார்கள் நடிகர்கள். ஆனால், தற்போது கெளதம்மேனன் இயக்கும் படத்தில் நடிப்பதற்காக தனது உடம்பை சிக்ஸ்பேக்கிற்கு மாற்றி வரும் அஜீத், சமீபத்தில் தனது மேக்கப்மேன் ஷக்தி என்பவரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வெளியில் தலைகாட்டியிருக்கிறார். அப்போது அவர் ஸ்லிம்மாக காட்சி கொடுத்ததோடு, பழைய சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் இருந்து மாறியிருந்தாராம். அதோடு, ஒரு புதுமையான ஹேர் ஸ்டைலில் இருந்தாராம்.
 ஆனால் அதைப்பார்த்த சிலர் அதை போட்டோ எடுத்து இணையதளங்களில் பரப்பி விட்டனர். இந்த கெட்டப்பில்தான் அஜீத் புதிய படத்தில் நடிக்கயிருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், படத்தில் நடிக்கத் தொடங்குவதற்கு முன்பே அஜீத்தின் புதிய கெட்டப் இப்படி அவுட்டாகி விட்டதால் அதிர்ச்சியில் இருக்கிறாராம் கெளதம்மேனன்.

No comments :

Post a Comment