ஸ்ருதி ஹன்சிகாவுடன் கம்போடியாவில் டுயட் பாடும் விஜய்
ஸ்ருதி - ஹன்சியுடன் விஜயின் சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புலி திரைப்படத்தின் வசன காட்சிகள் முடிவடைந்து விட்ட நிலையில் தற்போது பாடல் காட்சிகளை காட்சிப்படுத்தும் இறுதிகட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும், இதில் நாயகிகளாக நடிக்கும் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா இரண்டு பேருடனும் விஜய்க்கு டூயட் பாடல் உள்ளதாம். அந்த பாடல்களை சீனாவில் காட்சிப்படுத்து ஏற்கெனவே திட்டமிட்டிருந்தார் சிம்புதேவன். ஆனால், தற்போது திடீரென சீனாவை தவிர்த்து கம்போடியா நாட்டுக்கு மாற்றியிருக்கிறார். காரணம் புலி, சரித்திர பின்னணி கொண்ட கதையில் உருவாவதால், பல காட்சிகளை கோயில்களில் காட்சிப்படுத்தி வந்த அவர், பாடல் காட்சிகளையும் உலக பிரசித்தி பெற்ற கோயில்களில் காட்சிப்படுத்தவுள்ளார். அதனால் கம்போடியாவில் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அங்கோர்வாட் என்ற விஷ்ணு கோயிலில் இரண்டு பாடல்களை காட்சிப்படுத்துகின்றார். ஒரு வாரத்துக்கு முன்பே அங்கு செல்லவுள்ள திiர்ப்பட குழுவினர், படப்பிடிப்புக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து வைக்கப்போகிறார்களாம். ஆக, இந்த இரண்டு பாடல்களும் காட்சிப்படுத்தப்பட்டுவிட்டால், புலிக்கு பூசணிக்காய் உடைத்து விடுவார்கள் போல தெரிகின்றது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment