பிரபல பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மரணம்: மாலை இறுதிச்சடங்கு

No comments

தமிழ் திரைப்பட துறையின் பிரபல பாடலாசிரியரான நா.முத்துக்குமார் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் கன்னிகாபுரத்தில் பிறந்தவர் நா.முத்துக்குமார்.

தொடக்கத்தில் இயக்குனராகப் பணியாற்ற விரும்பி, இயக்குனர் பாலுமகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் பணி செய்தவர்.

சீமான் இயக்கிய வீரநடை படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர், இதுவரை கிட்டதட்ட 1500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.



Shocking: Award Winning Lyricist Na Muthukumar Passes Away
இரண்டு முறை தேசியவிருது பெற்ற முத்துக்குமார், மஞ்சள் காமாலை நோயால் கடந்த சில நாட்களாக அவதிப்பட்டு வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலமானார், இவரது மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திரைப்பட பாடல்கள் மட்டுமின்றி, சில்க் சிட்டி, குழந்தைகள் நிறைந்த வீடு உட்பட பல நாவல்களையும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று மாலை 6 மணிக்கு முத்துக்குமாரின் இறுதிச்சடங்கு நடைபெறவிருக்கிறது.

No comments :

Post a Comment