நடிகர் என்பதையும் தாண்டி ஓர் நல்ல உள்ளம் கொண்ட மனிதன் என்பது தான் திரையுலகில் ரஜினி .....

No comments

ரஜினி 1975-ல் இருந்து இன்று வரை ஏறத்தாழ 40 வருடங்களாக இந்திய திரையுலகில் அசைக்க முடியாத ஓர் நட்சத்திரம். அன்றைய இளசுகளில் இருந்து, இன்றைய பொடுசுகள் வரை அனைவரையும் ஈர்த்து வைத்திருக்கிறது இந்த காந்த சக்தி.
.
இதற்கு ஸ்டைல் தான் கரணம் என்றால் நான்கைந்து புகைப்படங்களை வீட்டின் சுவரில் ஒட்டியதோடு நின்றிருக்கும், ரஜினி எனும் 'தனி ஒருவன்' மீது ஏற்பட்ட ஈர்ப்பு.
.
எம்.ஜி.ஆர்-க்கு அடுத்து அசைக்க முடியாத அரசியல் சக்தியாக திகழ வாய்ப்பிருந்த போதிலும், அதை தட்டி கழித்துவிட்டு இமையம் ஏறி உயரம் தொட்டவர் ரஜினி.
.
எந்த ஒரு இந்திய நடிகருக்கும் மலேசியா, சிங்கப்பூர், சீனா, ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பியா, சவுதி என உலகின் எட்டுத்திக்கிலும் ரசிகர் பட்டாளம் இருந்ததில்லை. ஓர் நடிகன் என்பதை தாண்டி இதற்கு என்ன காரணம்...
குரைத்தால் தான் நாய், கர்ஜித்தால் தான் சிங்கம் என்பது போல யாருக்குள் எல்லாம் மனிதம் இருக்கிறதோ அவர்கள் தான் மனிதர்கள்.
அந்த வகையில், ஆசிய கண்டத்திலேயே பெயர், புகழ், ஊதியம் என அனைத்து வகையிலும் பெரிய நட்சத்திரமாக திகழ்ந்தாலும் தலைகனம் இன்றி நடந்துக் கொள்ளும் ரஜினியின் மனிதம் தான் இந்த உச்ச நட்சத்திரம் மக்கள் மனதில் உச்சம் தொட்டதன் காரணம்.
.
'நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று..' என்பது குறள், இந்த குறளுக்கு ஏற்ப நன்றி மறவா குணம் கொண்ட மனிதர்.
தனக்கு தீங்கு விளைவிக்கும் நபர்களுக்கும் புன்னகை மட்டுமே பரிசளித்து நகர்ந்து செல்லும் பண்பு.
இவை எல்லாம் தான் தொழில் ரீதியாகவும் சரி, இயல்பு வாழ்க்கை ரீதியாகவும் சரி, ரஜினி பிறருடன் ஒப்பீடு இல்லாமல் தனித்து விளங்க செய்கிறது.
.
திரைக்கு வருவதற்கு முன்னர் இருந்து இன்று வரை தான், தன் வேலை சார்ந்த விஷயங்களில் ரஜினி உழைப்பில் சறுக்கியதே இல்லை. மேலும், மற்றவர் உழைப்பை கெடுக்கவும் நினைத்தது இல்லை.
யார் ஒருவர் பிறர் உழைப்பை கெடுக்க நினைக்காமல், தன் உழைப்பின் மீது நம்பிக்கை வைத்து செயற்படுகிறார்களோ அவர்களுக்கு வெற்றி எட்டாக்கனியாவதில்லை.
.
நட்பு என்றதும், ரஜினி நடத்துனராக பணியாற்றிய போது இருந்த நண்பர்களை இன்றளவும் நேசித்து வருகிறார், அவர்களை சந்தித்து பேசி வருகிறார் என்பது தான் அனைவருக்கும் தெரியும்.
ஆனால், படங்கள் நடிப்பது, தயாரிக்க வாய்ப்பளிப்பது என திரையுலகிலும் நன்றி மறவா நட்பை இறுக்கமாக பிடித்து வருகிறார் ரஜினி.
.
கலைப்புலி தாணு விநியோகம் செய்து வந்த போது துவங்கியது ரஜினியுடனான நடிப்பு.
பைரவி படத்தை விநியோகம் செய்த போது தான் தாணு சூப்பர்ஸ்டார் என்று பட்டம் கொடுத்து விளம்பரப்படுத்தினார். இப்படி துவங்கிய நட்பு 36 ஆண்டுகளாக பயணித்து வருகிறது.
தான் கொடுத்த வாக்கை ரஜினி காப்பாற்றியதன் மூலமாக தான் கபாலி படத்தை தயாரிப்பு தாணு கைக்கு வந்த இரகசியம்.
.
இன்றெல்லாம் எந்த ஒரு விஷயமும் நான்கு பேருக்கு தெரியும்படி செய்தால் தான் நல்லவன், இறக்க குணம் கொண்டவன் என்ற பெயர் கிடைக்கிறது.
ஆனால், வலது கை செய்யும் உதவி, இடது கைக்கு தெரியக் கூடாது என்பார்கள். மேலும், செய்த உதவியை சொல்லிக் காண்பிக்க கூடாது என்பார்கள்.
இதை சரியாக பின்பற்றும் நபர் ரஜினி. தான் செய்யும் உதவிகளை ரஜினி எப்போதும் வெளியே சொல்லிக் கொண்டது இல்லை. இதனாலோ என்னவோ, இன்று முகநூல்வாசிகள் சிலர் இவர் உதவுவது அறியாமல் தூற்றி வருகிறார்கள்.
.
நாம் தொடர்ந்து மளிகை பொருள் வாங்கும் நபரிடமோ, தங்கம் வாங்கும் தொழிலதிபர்களிடமோ, வாகனங்கள் வாங்கும் நிறுவனங்களிடமோ, அவர்கள் ஏன் மக்களுக்கு உதவி செய்யவில்லை, நீங்கள் எல்லாம் துரோகி என தூற்றுவதில்லை.
ஆனால், சினிமா நடிகர்கள் என்றால் மட்டும் தூற்றி புகழ்தேடி கொள்வோம். இது எந்த வகையில் நியாயம்?
.
நடிகர் என்பதையும் தாண்டி ஓர் நல்ல உள்ளம் கொண்ட மனிதன் என்பது தான் திரையுலகில் ரஜினி பற்பல சாதனைகள் நிகழ்த்த பெரும் காரணியாக இருக்கிறது.
கபாலி 500 கோடி சாத்தியமா? என்பதற்கு ஒரே பதில் ரஜினிகாந்த் எனும் காந்தம் தான்.
.
Superstar Rajinikanth -


No comments :

Post a Comment