என் கட்டுப்பாட்டில் தான் என் வாழ்க்கை இருக்க வேண்டும்! அஞ்சலி!
தனது சித்தி பாரதிதேவியுடன் வசித்து வந்த அஞ்சலி, சில மாதங்களுக்கு முன் வீட்டிலிருந்து வெளியேறி, ஐதராபாத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கினார். பின்னர், தனது சொத்துக்களை பறிக்க முயற்சி நடப்பதாகவும் பாரதிதேவியுடன் சேர்ந்து இயக்குனர் களஞ்சியமும் தன்னை சித்ரவதை செய்வதாகவும் கொலை மிரட்டல் வருதாகவும் புகார் கூறினார். இதையடுத்து பரபரப்பாகப் பேசப்பட்ட அந்த விஷயம் இப்போது அப்படியே அமுங்கிவிட்டது.
இந்நிலையில் தெலுங்கு படங்களில் நடித்து வரும் அஞ்சலி கூறியதாவது: அந்தப் பிரச்னையில் இருந்து மீண்டு வந்துவிட்டேன். அதற்குப் பிறகு ஷூட்டிங்கில் கலந்துகொண்டதும் எனக்குள் மாற்றம் ஏற்பட்டதையும் என்னைச் சுற்றி பாசிட்டிவான அதிர்வு இருப்பதையும் உணர்ந்தேன். முன்பிருந்ததை விட வலுவானவளாக என்னை உணர முடிந்தது. ‘அன்று சித்திக்கு எதிராக பேசியதால் ஏதாவது விளைவுகளை சந்தித்தீர்களா?’ என்று கேட்கிறீர்கள்.
என்ன விளைவுகளை சந்திக்க முடியும்? சுயமாக சிந்தித்து முடிவெடுக்கக்கூடிய பெண்ணாக இப்போது இருக்கிறேன். என் கட்டுப்பாட்டில் என் வாழ்க்கை இருக்கவேண்டும் என நினைக்கிறேன். ஒரு தூசியை போல, அடிமைத்தனமாக நடத்தப்படுவதை எதிர்த்தேன். நானும் உயிருள்ள ஒரு பெண்தான். சுயமரியாதையுடன் வாழ நினைக்கிறேன். நான் சந்தித்தது போன்ற இக்கட்டான சூழ்நிலையை யார் சந்தித்திருந்தாலும் நான் எடுத்த முடிவைதான் எடுத்திருப்பார்கள். ‘உண்மையிலேயே என்ன நடந்தது’ என்பது போன்ற கேள்விகளை பிறகு வைத்துக்கொள்ளலாம். இப்போது எதுவும் சொல்ல விரும்பவில்லை.
அந்த பிரச்னையின்போது சக நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் அனைவரும் எனக்கு ஆதரவாக இருந்தது நம்பிக்கையை தந்தது. மற்றபடி வதந்திகள் வாழ்க்கையின் ஓர் அங்கமாக வந்துகொண்டுதான் இருக்கும். அதை பற்றி கவலைப்படவில்லை. ‘தெலுங்கு சினிமாவில் சீனியர் நடிகர்களுடனே நடிக்கிறீர்களே. இளம் ஹீரோக்களுடன் நடிக்க விருப்பம் இல்லையா?’ என்கிறார்கள். எனக்கு வரும் வாய்ப்புகள் அப்படி. அவர்கள் அனைவரும் சூப்பர் ஸ்டார்களாக இருக்கிறார்கள். எனக்கும் இளம் ஹீரோக்களுடன் நடிக்க ஆசைதான். விரைவில் அது நிறைவேறும்.
‘கிளாமருக்கு ஏன் எதிராக இருக்கிறீர்கள்?’ என்று கேட்கிறார்கள். நான் அறிமுகமான ‘கற்றது தமிழ்’ படத்தில் இருந்து இப்போது வரை, நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் கேரக்டராகவே அமைந்திருக்கிறது. நடிப்பின் மூலம் பிரபலமாகவே விரும்புகிறேன். ‘நான்கு பாடல், ரெண்டு காட்சி’ பார்முலாவில் நடிக்க விரும்பவில்லை.

Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment