விஜய்யின் சம்பளம் ரூ 20 கோடி

No comments
தலைவா பட ரிலீஸூக்காக காத்திருக்கும் நடிகர் விஜய் அடுத்து நடித்துவரும் படம் 'ஜில்லா' இந்தப்படத்தில் அவருக்கு ரூ 20 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.


 படத்துக்குப் படம் சம்பளத்தை உயர்த்துவதில் தமிழ் ஹீரோக்களுக்கு இணை எந்த திரையுலகிலும் கிடையாது. ரஜினி, கமல் போன்ற டாப் ஹீரோக்கள் தங்கள் நூறாவது படத்தில் கூட கோடி ரூபாய் சம்பளம் பெற்றதில்லை. ஆனால் விஜய், அஜீத், சூர்யா, தனுஷ், சிம்பு, அட.. சிவகார்த்திகேயன் உள்பட பலருக்கும் கோடி ரூபாய் என்பது ஆரம்ப கட்ட படங்களிலேயே கிடைத்துவிட்டது.

 விஜய்யைப் பொறுத்தவரை, பூவே உனக்காக படம் வரை அவருக்கு பெரிய சம்பளம் என சொல்லிக் கொள்ளும்படி யாரும் தந்ததில்லை. ஆனால் காதலுக்கு மரியாதைக்குப் பிறகு அவரது சம்பளம் கிடுகிடுவென உயர்ந்துவிட்டது.

தலைவா படத்தில் விஜய்யின் சம்பளம் ரூ 18 கோடி என்றும், அதற்கு அடுத்த படமான ஜில்லாவில் அவருக்கு ரூ 20 கோடிக்கு மேல் பேசப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்கள்.

 தற்போது தென்னிந்திய‌ சினிமாவில் சம்பள விஷயத்தில் டாப்பில் இருக்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிதான் அவருக்கு பிறகு விஜய் தான் 'தலைவா' படத்திற்கு ரூபா 18கோடி பெற்றார். இப்போது 'ஜில்லா'வுக்காக ரூபா 2 கோடி உயர்த்தி 20 கோடி சம்பளத்தை பெற்றுள்ளார்.

No comments :

Post a Comment