விளையாட்டு ரசிகையாக மாறிய ஹன்சிகா
சமீபத்தில் ஹன்சிகா நடித்து வெளியான சிங்கம் 2 வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.இதைத் தொடர்ந்து ஹன்சிகா, வாலு, வேட்டை மன்னன் படத்தில் சிம்புவுடன் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் மான் கராத்தே என்ற படத்தில் சிவ கார்த்திகேயன் ஜோடியாக நடித்து வருகிறார்.
இப்படத்தில் ஹன்சிகா, விளையாட்டு ரசிகையாக வேடம் ஏற்றிருக்கிறாராம். மான் கராத்தே கதைப்படி, எங்காவது விளையாட்டு போட்டி நடந்தால் அந்த மைதானத்தில் ஒரு பார்வையாளராக ஆஜராகுவாராம்.
மேலும் மைதானத்தில் தனது தோழிகளுடன் சேர்ந்து ஆட்டம் ஆடி, விசில் அடித்து ரசிப்பவராக தோன்றுகிறாராம் ஹன்சிகா.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment