பைக், ஆட்டோவை ரசிக்கும் நட்சத்திரங்கள்

No comments
சென்னை : நட்சத்திரங்கள் என்றாலே சொகுசு கார் மற்றும் கேரவன் வாங்கி ஜாலியாக வாழ்வார்கள் என்பது உண்மைதான். என்றாலும், சிலபேர் சில நேரங்களில் விதிவிலக்கு. அருகிலுள்ள கடைக்கு ஷாப்பிங் செல்வது அல்லது டிராபிக் ஜாமில் இருந்து தப்பிப்பதற்காக ஆட்டோ அல்லது பைக்கில் செல்வதை பெரிதும் ரசிக்கிறார்கள்.

அஜீத்திடம் பல பைக்குகள் உண்டு. எப்போதாவது அதில் ஒன்றை எடுத்துக்கொண்டு ஷூட்டிங்கிற்கு வருவார். தலையில் ஹெல்மட் இருப்பதால், யாரும் அடையாளம் காண முடியாது. இதையே விஜய் கடைபிடிக்கிறார். சூர்யா தன் மகள் தியாவை பள்ளிக்கு அழைத்துச் செல்வதே பைக்கில்தான். தனுஷ் மற்றும் ஜீவா பைக்கில் சென்னையைச் சுற்றுகிறார்கள். அப்பாஸ், அமீர், ஏ.ஆர்.முருகதாஸ், கரு.பழனியப்பன் போன்றோரும் பைக் பிரியர்கள். ஷூட்டிங் ஸ்பாட் மற்றும் எடிட்டிங், டப்பிங், ரீ,ரெக்கார்டிங், மிக்ஸிங் போன்ற பணிகளுக்கு பைக்கை பயன்படுத்துவார்கள். அது துரிதமான பயணமாகவும் இருக்கும்,

போக்குவரத்து நெரிசலில் சிக்கி டென்ஷனாக வேண்டியது இருக்காது. சமந்தா, பிரியா ஆனந்த், டாப்ஸி, நாசர், ரோகிணிக்கு ஆட்டோ சவாரி பிடிக்கும். நேரம் கிடைக்கும்போது அவர்களை ஆட்டோவில் பார்க்கலாம். ஒருமுறை சென்னை ஏ.வி.எம் ஸ்டுடியோவில் நடந்த ஷூட்டிங்கில் பங்கேற்ற சல்மான்கான், ஜாக்கிஷெராப் இருவரும் சைக்கிளில் வடபழனியில் இருந்து கிண்டிக்கு சென்று வந்தனர். சிக்னலில் சாதாரணமாக நின்றிருக்கும் சல்மான்கானை அடையாளம் கண்டு விசாரித்தபோது, ‘சிம்பிள்எக்ஸர்சைஸ்’ என்று தோளைக் குலுக்கினார்.


No comments :

Post a Comment