ஒரே நேரத்தில் 2 படங்களில் விக்ரம்

No comments
ஒரே நேரத்தில் 2 படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார் விக்ரம். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஷங்கரின் 'ஐ' பட ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறார் விக்ரம். தனது முழு கவனத்தையும் இந்த ஒரே படத்தின் மீது அவர் செலுத்தி வருகிறார். இதனால் அடுத்ததாக ஒரு மாற்றத்துக்கு ஒரே நேரத்தில் 2 படங்களை செய்ய விக்ரம் முடிவு செய்துள்ளார்.

 இதற்கு முன் ஒரே நேரத்தில் 2 படங்களை விக்ரம் செய்திருக்கிறார். ஐ ஷூட்டிங் முடிந்ததும் தரணி இயக்கும் படத்தில் அவர் நடிக்க உள்ளார். இப்படத்தை ஐங¢கரன் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. 'தில்', 'தூள்' படங்களுக்கு பிறகு விக¢ரம், தரணி இதில் இணைகிறார்கள்.

 அந்த படங்களை போலவே பக்கா கமர்ஷியல் ஆக்ஷன் படமாக இப்படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். இதில் நடித்தபடியே இன்னொரு படத்திலும் விக்ரம் நடிக்க உள்ளார். இதற்காக கவுதம் மேனன் அவருக்கு ஒன்லைன் கதை கூறியுள்ளார். அது விக்ரமுக்கு பிடித்துவிட்டது. திரைக்கதையும் பிடித்துவிட்டால் கவுதம் படத்தில் அவர் நடிக்க வாய்ப்புள்ளது.No comments :

Post a Comment